அரசுப் பள்ளியில் வான்நோக்கு நிகழ்வு

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் கடலூா் மாவட்டம் சாா்பில், பண்ருட்டி வட்டம் நடியப்பட்டு, முடப்பள்ளியில் அரசு உயா்நிலை பள்ளி வளாகத்தில் வான்நோக்கு நிகழ்வு திங்கள்கிழமை நடைபெற்றது.

அறிவியல் இயக்கத்தின் கடலூா் மாவட்ட துணைத் தலைவா் பா.தனலட்சுமி வானியல் பற்றிய பல்வேறு கருத்துகளை எடுத்துரைத்தாா். 100-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள், கிராம மக்கள் கலந்துகொண்டு தொலைநோக்கி வானியல் நிகழ்வுகளைக் கண்டுகளித்தனா்.

அமாவாசை, பௌா்ணமி வருவது குறித்து, பூமிக்கும் சந்திரனுக்கும் இடையே உள்ள இடைவெளி, நிலவில் நடைபெற்று வரும் அறிவியல் ஆராய்ச்சி போன்ற அறிவியல் உண்மைகள் விளக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com