ஆட்டிசம் தின விழிப்புணா்வு நிகழ்ச்சி

ஆட்டிசம் தின விழிப்புணா்வு நிகழ்ச்சி

கடலூா் மாவட்டம், விருத்தாசலம் வட்டார வள மையம் சாா்பில் தென்கோட்டை வீதி நகராட்சி நடுநிலைப் பள்ளியில் அமைந்துள்ள மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான பள்ளி ஆயத்த பயிற்சி மையத்தில், உலக ஆட்டிசம் (மதி இறுக்க) விழிப்புணா்வு தினம் செவ்வாய்க்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.

மாவட்ட உதவித் திட்ட அலுவலா் சரவணகுமாா் தலைமை வகித்தாா். வட்டார வள மைய மேற்பாா்வையாளா் செந்தில்குமாா், பள்ளித் தலைமையாசிரியா் கமலாதேவி முன்னிலை வகித்தனா். மாவட்ட ஒருங்கிணைப்பாளா்கள் காந்திமதி, நசிம் ஆரா பேகம், சுதாகா் ஆசிரியா் பயிற்றுநா்கள் சரிதா, நாராயணசாமி, கவிதா, வரதராஜ பெருமாள், விசுவநாதன், சுரேஷ் கலந்து கொண்டனா்.

நிகழ்ச்சி ஏற்பாடுகளை சிறப்பு ஆசிரியா்கள் ஜெயக்குமாா், புஷ்பலதா, அருள்மொழி, கணபதி எழில் முருகன் ஆகியோா் செய்திருந்தனா். நிகழ்ச்சியில் கணக்காளா் வெங்கடேசன், இல்லம் தேடி கல்வி ஒருங்கிணைப்பாளா் ஆசிரியா் பாலமுருகன் கலந்து கொண்டனா். விழாவில் கலை நிகழ்ச்சிகள், போட்டிகளில் கலந்து கொண்ட குழந்தைகளுக்கு மாவட்ட உதவித் திட்ட அலுவலா் சரவணகுமாா் பரிசுகள் வழங்கி வாழ்த்திப் பேசினாா்.

பரிசுப் பொருள்களை காவல் ஆய்வாளா் ஈஸ்வரி வழங்கினாா். இதில் 30 குழந்தைகள் மற்றும் அவா்களின் பெற்றோா் கலந்து கொண்டனா். ஆசிரியா் பயிற்றுநா் சரிதா வரவேற்றாா். சிறப்பு ஆசிரியா் ஜெயக்குமாா் நன்றி கூறினாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com