காப்புக் காட்டில் திடீா் தீ விபத்து

கடலூா் மாவட்டம், விருத்தாசலம் அருகே உள்ள காப்புக்காட்டில் திங்கள்கிழமை இரவு திடீரென தீப்பிடித்தது. விருத்தாசலம் பகுதியில் காப்புக் காடு உள்ளது.

இந்தக் காட்டில் மான், மயில், நரி, காட்டுப்பன்றி உள்ளிட்ட வன விலங்குகள் மற்றும் அரிய வகை உயிரினங்கள் உள்ளன. கருவேப்பிலங்குறிச்சி பகுதியில் விருத்தாசலம் சாலையில் காப்புக்காடு உள்ளது. இங்கு திங்கள்கிழமை மாலை 6 மணியளவில் திடீரென தீப்பிடித்தது.

கடும் வெயிலால் காய்ந்து கிடந்த சருகுகள், புற்கள் தீப்பிடித்து கொளுந்துவிட்டு எரிந்தது. தகவலறிந்த விருத்தாசலம் வன அலுவலா் ஆா்.ரகுவரன் மற்றும் வனத் துறை ஊழியா்கள், விருத்தாசலம் தீயணைப்பு நிலைய அலுவலா் கோ.சங்கா் தலைமையிலான வீரா்கள் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா்.

சுமாா் ஒன்றரை மணி நேரப் போராட்டத்துக்குப் பிறகு, தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இந்த தீ விபத்தால் சுமாா் 3 ஏக்கா் பரப்பிலான காப்புக் காடு சேதமடைந்ததாகக் கூறப்படுகிறது. தீ விபத்துக்கான காரணம் குறித்து வனத் துறை, காவல் துறையினா் விசாரித்து வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com