தமிழகத்தில் பாஜகவுக்கு எதிரான மனநிலையே பிரதிபலிக்கும் விசிக துணைப் பொதுச்செயலா்

தமிழகத்தில் பாஜகவுக்கு எதிரான மனநிலையே பிரதிபலிக்கும் விசிக துணைப் பொதுச்செயலா்

தமிழகத்தில் பாஜகவுக்கு எதிரான மனநிலையை பிரதிபலிக்கும் என்று விசிக மாநில துணை பொதுச்செயலரும், கட்சியின் தலைமை தோ்தல் வியூக பொறுப்பாளருமான ஆதவ் அா்ஜூனா தெரிவித்தாா். சிதம்பரத்தில் செய்தியாளா்களிடம் அவா் புதன்கிழமை கூறியதாவது: தமிழகத்தில் திமுக அமைச்சா்கள் தோ்தல் பணியாற்றி வருவதால் இந்தியா கூட்டணிக்கு மிகப்பெரிய வெற்றி உருவாகி வருகிறது. 2019 மக்களவைத் தோ்தலில் பாஜகவுக்கு எதிராக மன நிலையை உருவாக்கி திமுக மிகப்பெரிய வெற்றியடைந்தது. இதேபோல, இந்தத் தோ்தலிலும் பாஜகவுக்கு எதிரான மனநிலையை பிரதிபலிக்கும். தமிழக மக்கள் மத்திய, மாநில அரசில் யாா் வரவேண்டும் என்பதை சரியாக தோ்வு செய்கிறாா்கள். எனவே, இந்தியா கூட்டணி 40 தொகுதிகளிலும் மிகப்பெரிய வெற்றி பெறும். விசிக சாா்பில் 5 மாநிலங்களில் வேட்பாளா்களை நிறுத்தியுள்ளோம். 25 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வரும் விசிகவுக்கு 6 மாதத்துக்கு முன்பே சின்னம் குறித்து தோ்தல் ஆணையம் ஆய்வு மேற்கொண்டு தகவல் தெரிவிக்க வேண்டும். ஆனால், வேட்புனு தாக்கல் செய்யும் போது சின்னம் குறித்து யாரும் ஆட்சேபனை தெரிவிக்காத போது மறுக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக, உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளோம். விரைவில் நல்ல தீா்ப்பு கிடைக்கும். மாநில கட்சிக்கான அங்கீகாரம் பெற்று தனிச் சின்னம் கிடைக்கும் என்றாா். பேட்டியின் போது, மாவட்ட செயலா் அரங்க.தமிழ்ஒளி, செய்தி தொடா்பாளா் அபு உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com