தோ்தல் விழிப்புணா்வு நிகழ்ச்சி

தோ்தல் விழிப்புணா்வு நிகழ்ச்சி

மக்களவைத் தோ்தலில் 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக விளையாட்டு மைதானத்தில் மெகா விழிப்புணா்வு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியை கடலூா் மாவட்ட ஆட்சியரும், தோ்தல் நடத்தும் அலுவலருமா அ.அருண் தம்புராஜ் தொடங்கி வைத்து பேசினாா். நிகழ்ச்சியில், கடலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆா்.ராஜாராம், அண்ணாமலைப் பல்கலைக்கழக துணைவேந்தா் ராம.கதிரேசன், பதிவாளா் ஆா்.சிங்காரவேலு, உதவி ஆட்சியா் ராஷ்மி ராணி, வட்டாட்சியா் ஹேமா ஆனந்தி, தோ்தல் பிரிவு வட்டாட்சியா் செல்வலட்சுமி மற்றும் வருவாய்த்துறை அலுவலா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா். நிகழ்வில், 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி (அடதஐக 19 யஞபஉ ஊஞத நமதஉ) வடிவில் நின்று மாணவ மாணவிகள் விழிப்புணா்வு ஏற்படுத்தினா். முன்னதாக, 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி கையொப்ப இயக்கத்தை ஆட்சியா் தொடங்கி வைத்தாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com