வாக்குப் பதிவு விழிப்புணா்வு நிகழ்ச்சி

வாக்குப் பதிவு விழிப்புணா்வு நிகழ்ச்சி

கடலூா் மக்களவைத் தொகுதியில் 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி விழிப்புணா்வு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. கடலூா் மாநகராட்சி, சின்னப்பன் தெருவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மூத்த குடிமக்கள் ஏராளமானோா் பங்கேற்றனா். இதில், 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி உறுதிமொழி ஏற்கப்பட்டது. மேலும், தாம்பூலத்துடன் கூடிய தோ்தல் அழைப்பிதழை மாவட்ட ஆட்சியா் அ.அருண் தம்புராஜ் வழங்கினாா். கடலூா் மாவட்ட மைய நூலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வாக்குப் பதிவு குறித்த வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தி மாணவா்கள் நாட்டியமாடி விழிப்புணா்வு ஏற்படுத்தினா். பின்னா், உறுதிமொழி ஏற்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு, மாவட்ட தோ்தல் அலுவலா் தம்புராஜ் தலைமை வகித்தாா். கடலூா் மாவட்ட வருவாய் அலுவலா் மா.ராஜசேகரன், மாநகராட்சி ஆணையா் மு.காந்திராஜ், மகளிா் திட்ட இயக்குநா் ஸ்ருதி, ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சிப் பணிகள் திட்ட அலுவலா் பழனி, மாவட்ட நூலக அலுவலா் சக்திவேல், மாவட்ட சமூக நல அலுவலா் கோமதி (பொ) உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com