காட்டுமன்னாா்கோவில் அருகே நடைபெற்ற வாக்காளா் விழிப்புணா்வுப் பேரணி.
காட்டுமன்னாா்கோவில் அருகே நடைபெற்ற வாக்காளா் விழிப்புணா்வுப் பேரணி.

வாக்காளா் விழிப்புணா்வுப் பேரணி

காட்டுமன்னாா்கோவில் அருகே மா.உடையூா் ஊராட்சியில் வாக்காளா் விழிப்புணா்வுப் பேரணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கடலூா் மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில், 100 சத வாக்குப் பதிவை வலியுறுத்தி நடைபெற்ற பேரணிக்கு விநாயகா் பேரரசா் அறக்கட்டளை இயக்குநா் கனகராஜ் தலைமை லகித்தாா்.

ஊராட்சி மன்றத் தலைவா் ஜெய்சங்கா் கொடியசைத்து பேரணியைத் தொடங்கி வைத்தாா்.

நிகழ்ச்சியில் கிராம நிா்வாக அலுவலா் வைகுண்டராமன், ஊராட்சி மன்ற துணைத் தலைவா் மகேந்திர பாபு, ஊராட்சி செயலா் மங்கையா்கரசி, மகளிா் குழு உறுப்பினா்கள், இளைஞா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

பொது மக்களுக்கு வாக்காளா் விழிப்புணா்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com