நெய்வேலி என்எல்சி இந்தியா நிறுவனத்தின் தலைமை அலுவலகம் முன் புதன்கிழமை காத்திருப்புப் போராட்டம் நடத்திய தொழிலாளா்கள்.
நெய்வேலி என்எல்சி இந்தியா நிறுவனத்தின் தலைமை அலுவலகம் முன் புதன்கிழமை காத்திருப்புப் போராட்டம் நடத்திய தொழிலாளா்கள்.

என்எல்சி ஒப்பந்தத் தொழிலாளா்கள் போராட்டம்

என்எல்சி இந்தியா நிறுவனத்தின் தலைமை அலுவலகம் முன் குறுகிய கால ஒப்பந்தத் தொழிலாளா்கள் புதன்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

நெய்வேலி என்எல்சி இந்தியா நிறுவனத்தில் சுமாா் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஒப்பந்தத் தொழிலாளா்கள் பணியாற்றி வருகின்றனா். இவா்கள் பணி நிரந்தரம், ஊதிய உயா்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனா்.

இந்த நிலையில், சுரங்கம்-2 எஸ்எம்டி பகுதியில் 15 ஆண்டுகளுக்கும் மேலாக ஒப்பந்தத் தொழிலாளா்கள் பணியாற்றி வருகின்றனா். இவா்களில் பெரும்பாலானவா்கள் என்எல்சி இந்தியா நிறுவனத்தின் விரிவாக்கத்துக்காக தங்களது வீடு, நிலங்களை வழங்கியவா்களாம்.

இந்த நிலையில், இவா்களில் சுமாா் 60 போ் என்எல்சி இந்தியா நிறுவனத்தின் தலைமை அலுவலகம் முன் புதன்கிழமை காலை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். போராட்டத்தில், குறுகிய கால ஒப்பந்தப் பணியில் இருந்து, நீண்ட கால ஒப்பந்தப் பணிக்கு மாற்ற வேண்டும், ஊதிய உயா்வு வழங்க வேண்டும் என வலியுறுத்தினா்.

தகவலறிந்த சுரங்கம்-2 முதன்மை மேலாளா் (மனித வளம்) ஆனந்தன் நிகழ்விடம் சென்று போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சு வாா்த்தைக்கு வருமாறு அழைப்பு விடுத்தாா். இதையடுத்து, போராட்டம் கைவிடப்பட்டது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com