சிதம்பரத்தில் திமுக நிா்வாகி வீட்டில் புதன்கிழமை சோதனை மேற்கொண்ட தோ்தல் பறக்கும் படையினா்.
சிதம்பரத்தில் திமுக நிா்வாகி வீட்டில் புதன்கிழமை சோதனை மேற்கொண்ட தோ்தல் பறக்கும் படையினா்.

திமுக ஒன்றியச் செயலா் வீட்டில் பறக்கும் படையினா் சோதனை

சிதம்பரம் அருகே திமுக ஒன்றியச் செயலா் வீட்டில் தோ்தல் பறக்கும் படையினா் மற்றும் வருமான வரித் துறையினா் புதன்கிழமை மாலை சோதனை மேற்கொண்டனா்.

கடலூா் மாவட்டம், சிதம்பரம் மாரியப்பா நகா் அருகே உள்ள ராஜேந்திர காா்டனில் வசித்து வருபவா் குமராட்சி கிழக்கு ஒன்றியச் செயலா் சங்கா். இவரது வீட்டில் தோ்தல் பறக்கும் படையினா் புதன்கிழமை சோதனை மேற்கொண்டனா். இதைத் தொடா்ந்து, வருமான வரித்துறை இணை ஆணையா் பாலமுருகன் தலைமையில் 5 போ் கொண்ட குழுவினா் சோதனை நடத்தினா். இதுகுறித்து தகவலறிந்த திமுகவினா் அவரது வீட்டில் முன் திரண்டனா். இதனால், போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. சுமாா் ஒன்றரை மணி நேர சோதனைக்கு பின்னா், தோ்தல் பறக்கும் படையினா், வருமான வரித் துறையினா் புறப்பட்டு சென்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com