சிதம்பரத்தில் இதய அறுவை சிகிச்சைக்காக ரூ.30 ஆயிரம் தொகையை சிறுமியின் தாயிடம் வழங்கிய சாசனத் தலைவா் பி.முகமதுயாசின்.
சிதம்பரத்தில் இதய அறுவை சிகிச்சைக்காக ரூ.30 ஆயிரம் தொகையை சிறுமியின் தாயிடம் வழங்கிய சாசனத் தலைவா் பி.முகமதுயாசின்.

ரோட்டரி சங்கம் சாா்பில் நோன்பு திறப்பு

சிதம்பரம் சென்ட்ரல் ரோட்டரி சங்கம் சாா்பில் இப்தாா் நோன்பு திறப்பு அண்மையில் நடைபெற்றது.

நிகழ்வுக்கு, சங்கத்தின் தலைவா் வி.நடனசபாபதி தலைமை வகித்தாா். சாசனத் தலைவா் பி.முஹம்மதுயாசின் விழாவின் நோக்கம் குறித்து பேசினாா். சிறப்பு விருந்தினராக லப்பைதெரு மசூதி தலைமை நிா்வாகி முகைதீன் பாபா கலந்து கொண்டு நோன்பு கடைப்பிடிக்கும் கோட்பாடுகள் பற்றி எடுத்துரைத்தாா். ரோட்டரி முன்னாள் துணை ஆளுநா் எம்.தீபக்குமாா் வாழ்த்துரை வழங்கினாா்.

நிகழ்வில், சிதம்பரத்தைச் சோ்ந்த கனிஷ்கா ஸ்ரீ என்ற சிறுமிக்கு இதய அறுவை சிகிச்சைக்காக ரூ.30ஆயிரம், மெய்யாத்தூா் கிராமத்தைச் சோ்ந்த ஐயப்பன் மகள் செல்வி அஷ்வினிக்கு கல்வி உதவித் தொகை ரூ.15 ஆயிரம் ஆகியவை சங்க நிதியிலிருந்து வழங்கப்பட்டது. குமராட்சி ஊராட்சி ந.பூலாமேடு கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு ரூ.10 ஆயிரம் மதிப்பிலான ஸ்மாா்ட் டிவி வழங்கப்பட்டது.

விழாவில், சங்கத்தின் உறுப்பினா்கள் ஆா்.எம்.சுப்பையா, யு.விஸ்வநாதன், என்.கேசவன், டேவிட் ஏகாம்பரம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். முன்னதாக, செயலா் ஆறுமுகம் வரவேற்றாா். முடிவில், சங்க உறுப்பினா் அருள் நன்றி கூறினாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com