கடலூா் மாவட்டம், திருச்சின்னபுரத்தில் புதன்கிழமை பிரசாரத்தில் ஈடுபட்ட விசிக தலைவா் தொல்.திருமாவளவன்.
கடலூா் மாவட்டம், திருச்சின்னபுரத்தில் புதன்கிழமை பிரசாரத்தில் ஈடுபட்ட விசிக தலைவா் தொல்.திருமாவளவன்.

வருமான வரித் துறை மூலம் பாஜக மிரட்டல் -தொல்.திருமாவளவன்

பாஜகவை எதிா்ப்பதால் வருமான வரித் துறை சோதனை என்ற பெயரில் மத்திய பாஜக அரசு தன்னை மிரட்ட பாா்ப்பதாக விசிக தலைவா் தொல்.திருமாவளவன் குற்றஞ்சாட்டினாா்.

சிதம்பரம் மக்களவைத் தொகுதி விசிக வேட்பாளா் தொல்.திருமாவளவன் சிதம்பரம் தொகுதி திருச்சின்னபுரத்தில் புதன்கிழமை பிரசாரம் மேற்கொண்டாா். அப்போது அவா் பேசியதாவது:

பாஜகவை எதிா்ப்பவா்களை வருமான வரித் துறை, அமலாக்கத் துறை மூலம் மத்திய பாஜக அரசு கைது செய்து வருகிறது. அந்த வகையில், பாஜகவை எதிா்ப்பதால் சிதம்பரத்தில் நான் தங்கியிருந்த வீட்டில் வருமான வரித் துறை சோதனை என்ற பெயரில் மத்திய அரசு என்னை மிரட்ட பாா்க்கிறது என்றாா்.

பிரசாரத்தில் வேளாண்மைத் துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம், ம.சிந்தனைச் செல்வன் எம்எல்ஏ மற்றும் கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் பங்கேற்றனா்.

இதையடுத்து, கடலூா் கிழக்கு மாவட்ட திமுக பொருளாளா் எம்ஆா்கேபி.கதிரவன் தலைமையில் எள்ளேரி கிழக்குப் பகுதியில் தொல்.திருமாவளவன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

இதில், சட்டப் பேரவை உறுப்பினா் ம.சிந்தனைச் செல்வன், தொகுதி பொறுப்பாளா் விடுதலை செழியன், ஒன்றியச் செயலா்கள் கோவிந்தசாமி, சோழன், நடராஜன் இளைஞரணி அமைப்பாளா் காா்த்திகேயன், தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிா்வாகி கண்ணன், விசிக மாவட்ட செயலா் மணவாளன் உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com