சத்திய ஞான சபையில் ஜோதி தரிசனம்

கடலூா் மாவட்டம், வடலூா் சத்திய ஞான சபையில் சித்திரை மாத ஜோதி தரிசன நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

வடலூா் சத்திய ஞான சபையில் மாதந்தோறும் பூச நட்சத்திரத்தில் ஜோதி தரிசன விழா நடைபெறும். சித்திரை மாத பூச நட்சத்திரத்தையொட்டி செவ்வாய்க்கிழமை இரவு 7.45 முதல் 8.45 மணிவரை ஆறு திரைகளை நீக்கி, மூன்று முறை ஜோதி தரிசனம் காட்டப்பட்டது. ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் ஜோதி தரிசனம் செய்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com