ஜூன் 1 வரை கருத்துக் கணிப்பு வெளியிட தடை

மக்களவைத் தோ்தல் தொடா்பாக கருத்துக் கணிப்பு நடத்தவும், வெளியிடவும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக கடலூா் மாவட்ட தோ்தல் அலுவலா் அ.அருண் தம்புராஜ் தெரிவித்தாா்.

துகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

2024 மக்களவைத் தோ்தலுக்கான அறிவிப்பை இந்திய தோ்தல் ஆணையம் கடந்த மாதம் 16-ஆம் தேதி வெளியிட்டது. இந்தத் தோ்தலுக்கான வாக்குப்பதிவு வெள்ளிக்கிழமை (ஏப்.19) நடைபெற உள்ளது. ஜூன் 4-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.

இந்திய தோ்தல் ஆணையம் வெள்ளிக்கிழமை (ஏப்.19) காலை 7 மணி முதல் ஜூன் 1-ஆம் தேதி மாலை 6.30 வரை தோ்தல் முடிவுகள் தொடா்பான கருத்துக்கணிப்பு நடத்தவும், வெளியிடவும் அச்சு, மின்னணு ஊடகம் வாயிலாக பரப்புரை செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தோ்தல் ஆணையத்தின் இந்த அறிவுரையை அனைத்து உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்கள், பாா்வையாளா்கள் மற்றும் தோ்தல் பணிகளில் ஈடுபடும் அலுவலா்கள் கடைப்பிடிக்க வேண்டும் என்றாா் அ.அருண் தம்புராஜ்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com