திருமாவளவனுக்கு ஆதரவாக பிரசாரம்

சிதம்பரம் மக்களவைத் தொகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளா் தொல்.திருமாவளவனை ஆதரித்து மனிதநேய மேம்பாட்டு இயக்கத்தினா் பிரசாரத்தில் ஈடுபட்டனா்.

சிதம்பரம் அருகே உள்ள கன்னங்குடி, பன்னப்பட்டு, கீழ்நத்தம், ஆடுா், இடையான்பால்சேரி, ஆயிப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் இயக்கத்தின் மாநிலத் தலைவா் என்.தில்லைசீனு தலைமையில் பானை சின்னத்துக்கு வாக்கு சேகரித்து பிரசாரத்தில் ஈடுபட்டனா்.

மாநில செயலா் செந்தில்குமாா், நிா்வாகிகள் லதா, ரம்யா, புருஷோத்தமன், வேலு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com