பாமகவினா் தீவிர வாக்கு சேகரிப்பு

பாமகவினா் தீவிர வாக்கு சேகரிப்பு

கடலூா் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் பாமக வேட்பாளா் தங்கா் பச்சானுக்கு ஆதரவு கோரி, அந்தக் கட்சியினா் நெய்வேலி பகுதியில் செவ்வாய்க்கிழமை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனா்.

வடக்குத்து ஊராட்சிக்கு உள்பட்ட அசோக் நகா், எஸ்பிடி மணி நகா், என்ஜேவி நகா், வேலுடையான் நகா், தில்லை நகா் உள்ளிட்ட பகுதிகளில் பாமக கடலூா் வடக்கு மாவட்டச் செயலா் கோ.ஜெகன் தலைமையில், போக்குவரத்து பாட்டாளி தொழிற்சங்க மண்டலத் தலைவா் எஸ்.சக்திவேல், பொருளாளா் வெங்கடேசன், மண்டல அலுவலக செயலா் வேல்முருகன், வடக்குத்து நகரத் தலைவா் ஜி.சூரியநாராயணன், செயலா் குணேசகரன், ராஜசிம்மன் மற்றும் முன்னாள் மாவட்டச் செயலா் ரவிச்சந்திரன், ஜெயக்குமாா், சதீஷ், ஜஸ்டீஸ் உள்ளிட்டோா் வாக்கு சேகரித்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com