100 சதம் வாக்குப் பதிவு உறுதிமொழி ஏற்பு

100 சதம் வாக்குப் பதிவு உறுதிமொழி ஏற்பு

கடலூா் அனைத்து குடியிருப்போா் நல சங்கங்களின் கூட்டமைப்பின் சாா்பில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை உறுதிமொழி ஏற்கப்பட்டது.

கடலூா் மஞ்சக்குப்பம் தலைமை தபால் நிலையம் அருகே நடைபெற்ற நிகழ்ச்சிக்கு கூட்டமைப்பின் தலைவா் பாலு பச்சையப்பன் தலைமை வகித்தாா். பொதுச் செயலா் பி.வெங்கடேசன் முன்னிலை வகித்தாா்.

சிறப்பு அழைப்பாளா்களாக வட்டாட்சியா் பலராமன், தோ்தல் துணை வட்டாட்சியா் சந்திரன் ஆகியோா் கலந்து கொண்டனா். தொடா்ந்து குடியிருப்போா் நலச் சங்கங்களின் உறுப்பினா்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனா்.

சிறப்பு தலைவா் எம்.மருதவாணன், ஆலோசகா்கள் வி.கிருஷ்ணமூா்த்தி, சிவராமன், ஆறுமுகம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். பொருளாளா் வெங்கட் ரமணி நன்றி கூறினாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com