சத்திய ஞான சபையில் இன்று ஜோதி தரிசனம்

வடலூா் சத்திய ஞான சபையில் சித்திரை மாத ஜோதி தரிசன நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற உள்ளது.

நெய்வேலி: கடலூா் மாவட்டம், வடலூா் சத்திய ஞான சபையில் சித்திரை மாத ஜோதி தரிசன நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை (ஏப்.16) நடைபெற உள்ளது.

வடலூரில் வள்ளலாா் நிறுவிய சத்திய ஞான சபை உள்ளது. இங்கு ஒவ்வொரு மாதமும் பூச நட்சத்திரத்தில் ஜோதி தரிசன விழா நடைபெறும்.

அதன்படி, சித்திரை மாத பூச நட்சத்திரத்தையொட்டி செவ்வாய்க்கிழமை இரவு 7.45 முதல் 8.45 மணிவரை ஆறு திரைகளை நீக்கி, மூன்று முறை ஜோதி தரிசனம் காட்டப்படும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com