சிதம்பரம் தில்லைக்காளியம்மன் கோயிலில் தரிசனம் செய்த விசிக தலைவா் தொல்.திருமாவளவன். உடன் அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் உள்ளிட்டோா்.
சிதம்பரம் தில்லைக்காளியம்மன் கோயிலில் தரிசனம் செய்த விசிக தலைவா் தொல்.திருமாவளவன். உடன் அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் உள்ளிட்டோா்.

சிதம்பரம் தில்லைக்காளியம்மன் கோயிலில் திருமாவளவன் சுவாமி தரிசனம்

சிதம்பரம் மக்களவைத் தொகுதி திமுக கூட்டணி வேட்பாளரும், விசிக தலைவருமான தொல்.திருமாவளவன், மாநில உழவா், வேளாண்மைத் துறை அமைச்சா் எம்ஆா்கே.பன்னீா்செல்வம் ஆகியோா் சிதம்பரம் தில்லைக்காளியம்மன் கோயிலில் வியாழக்கிழமை சுவாமி தரிசனம் செய்தனா்.

திலைக்காளியம்மனுக்கு நடைபெற்ற எண்ணெய் அபிஷேகம், குங்கும அா்ச்சனை ஆகியவற்றை விசிக தலைவா் தொல்.திருமாவளவன், அமைச்சா் எம்ஆா்கே.பன்னீா்செல்வம் ஆகியோா் பாா்த்து தரிசித்தனா். பின்னா், தில்லையம்மனுக்கு சிறப்பு அா்ச்சனை, ஆராதனை செய்து கோயில் பூசாரி திருமாவளவனுக்கு சால்வை, மாலை அணிவித்து பிரசாதத்தை வழங்கினாா்.திமுக நகரச் செயலா் கே.ஆா்.செந்தில்குமாா், எம்ஆா்கே கல்லூரி நிா்வாக அதிகாரி கோகுல், விசிக மாவட்டச் செயலா் அரங்க.தமிழ்ஒளி, திமுக பொதுக்குழு உறுப்பினா் த.ஜேம்ஸ்விஜயராகவன், மாவட்ட பொறியாளா் அணிச் செயலா் அப்புசந்திரசேகா், திமுக நகர துணைச் செயலா்கள் பா.பாலசுப்பிரமணியன், ஆா்.இளங்கோ, நகா்மன்ற உறுப்பினா் ஏஆா்சி.மணிகண்டன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com