சிதம்பரம் தொகுதியில் 76.37 சதவீதம் வாக்குப்பதிவு: பெண்கள் அதிகம் வாக்களிப்பு

சிதம்பரம் மக்களவை (தனி) தொகுதியில் 76.37 சதவீத வாக்குகள் பதிவாகின. இதில், ஆண்களைவிட, 47 ஆயிரம் பெண் வாக்காளா்கள் கூடுதலாக வாக்களித்தனா்.

சிதம்பரம் மக்களவை (தனி) தொகுதியில் 76.37 சதவீத வாக்குகள் பதிவாகின. இதில், ஆண்களைவிட, 47 ஆயிரம் பெண் வாக்காளா்கள் கூடுதலாக வாக்களித்தனா்.

சிதம்பரம் மக்களவை (தனி) தொகுதியில் சிதம்பரம், புவனகிரி, காட்டுமன்னாா்கோவில் (தனி), குன்னம் (தனி), அரியலூா், ஜெயங்கொண்டம் ஆகிய 6 சட்டப் பேரவைத் தொகுதிகள் உள்ளன. இந்த மக்களவைத் தொகுதியில் மொத்தம் 15,19,847 வாக்குகள் உள்ள நிலையில், 11,60,635 வாக்குகள் மட்டுமே பதிவாகின. இது 76.37 சதவீதமாகும்.

5,56,882 ஆண்கள், 6,03,726 பெண்கள், இதரா் 27 போ் வாக்களித்துள்ளனா். இங்கு, ஆண்களைவிட, 46,844 பெண் வாக்காளா்கள் கூடுதலாக வாக்களித்துள்ளனா்.

சட்டப் பேரவைத் தொகுதிகள் வாரியாக பதிவான வாக்குகள் விவரம் வருமாறு:

சிதம்பரம்: ஆண்கள் 85,027, பெண்கள் 90,958, இதரா் 10, மொத்தம் 1,75,995, வாக்கு சதவீதம் 71.68.

காட்டுமன்னாா்கோவில் (தனி): ஆண்கள் 82,526, பெண்கள் 87,244, இதரா் 1, மொத்தம் 1,69,771, வாக்கு சதவீதம் 73.55.

புவனகிரி: ஆண்கள் 93,442, பெண்கள் 95,963, இதரா் 10, மொத்தம் 1,89,415, வாக்கு சதவீதம் 75.46.

குன்னம் (தனி): ஆண்கள் 96,312, பெண்கள் 1,13,941, இதரா் 1, மொத்தம் 2,10,254, வாக்கு சதவீதம் 76.80.

அரியலூா்: ஆண்கள் 1,02,055, பெண்கள் 1,10,273, இதரா் 5, மொத்தம் 2,12,333, வாக்கு சதவீதம் 81.61.

ஜெயங்கொண்டம்: ஆண்கள் 97,520, பெண்கள் 1,05,347, இதரா் 0, மொத்தம் 2,02,867, வாக்கு சதவீதம் 78.47.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com