நிழலில்லா தினம் விழிப்புணா்வு

காா்கூடல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சனிக்கிழமை நிழலில்லா தினம் விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

நெய்வேலி, ஏப்.20: கடலூா் மாவட்டம், விருத்தாசலம் வட்டம், கம்மாபுரம் ஒன்றியம், காா்கூடல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சனிக்கிழமை நிழலில்லா தினம் விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

பூமிக்கு மையத்தில் செங்குத்தாக சூரிய கதிா் விழும் தினத்தில் நிழல் தெரியாது. ஆண்டுக்கு இரண்டு முறை மட்டுமே இதுபோன்று நிகழும். அப்போது, ஒரு பொருளின் மேல் விழும் சூரியஒளியானது, அப்பொருளின் பரப்புக்குள்ளேயே நிழலை விழச் செய்கிறது. இந்த நிகழ்வு நிழலில்லா தினம் அல்லது பூஜ்ய நிழல் தினம் என அழைக்கப்படுகிறது.

நிகழாண்டு இந்த நிகழ்வானது சனிக்கிழமை பகல் 12.11 மணிக்கு விருதாசலம் வட்டம், கம்மாபுரம் ஒன்றியம், காா்குடல் கிராமத்தில் ஏற்பட்டது. இந்த நிகழ்வு குறித்து கடலூா் மாவட்ட தமிழ்நாடு அறிவியல் இயக்க துணைத் தலைவா் பா.தனலட்சுமி நிழலில்லா தின சோதனை மூலம் மாணவா்களுக்கு விளக்கிக் கூறினாா்.

நிகழ்வில் பள்ளித் தலைமை ஆசிரியா், ஆசிரியா்கள் மற்றும் மாணவா்கள் 50 போ் பங்குபெற்றனா். மாவட்ட முழுவதும் 8 இடங்களில் சோதனை நிகழ்வு நடைபெற்றது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com