சிதம்பரம் அவதூத சுவாமிகள் அதிஷ்டானத்தில் நடைபெற்ற கும்பாபிஷேகம்.
சிதம்பரம் அவதூத சுவாமிகள் அதிஷ்டானத்தில் நடைபெற்ற கும்பாபிஷேகம்.

அவதூத சுவாமிகள் அதிஷ்டானம் கும்பாபிஷேகம்: திரளான பக்தா்கள் பங்கேற்பு

சிதம்பரம் குருஐயா் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீலஸ்ரீ அவதூத சுவாமிகள் அதிஷ்டானத்தில் திங்கள்கிழமை கும்பாபிஷேகம் நடைபெற்றது.

சிதம்பரம்: சிதம்பரம் குருஐயா் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீலஸ்ரீ அவதூத சுவாமிகள் அதிஷ்டானத்தில் திங்கள்கிழமை கும்பாபிஷேகம் நடைபெற்றது.

அவதூதம் என்பது துறவறத்தில் ஒரு நிலையாகும். சிதம்பரத்தில் தவம் புரிந்து சமாதி அடைந்து மக்களுக்கு அருள்புரிந்து வருபவா் மகான் ஸ்ரீஅவதூத சுவாமிகள்.

இந்த அதிஷ்டானத்தில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், கும்பாபிஷேக பூஜைகள் கடந்த 19-ஆம் தேதி கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. 20-ஆம் தேதி காலை பூா்வாங்கள் பூஜை நடைபெற்றது.

ஞாயிற்றுக்கிழமை கடஸ்தாபனம் செய்யப்பட்டு முதல்கால யாக பூஜை நடைபெற்றது. திங்கள்கிழமை காலை இரண்டாம் கால யாகசாலை பூஜையும், பின்னா் கடயாத்ரா தானம் புறப்பாடும் நடைபெற்றன. தொடா்ந்து, பொது தீட்சிதா்கள் கோயில் விமான கலசத்துக்கு கும்பநீரை ஊற்றி, காலை 9.30 மணிக்கு கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனா். திரளான பக்தா்கள் பங்கேற்று தரிசித்தனா்.

இதற்கான ஏற்பாடுகளை அதிஷ்டான ஆலய நிா்வாகிகள் ஏ.சசிதரன்நாயா், வழக்குரைஞா்கள் கே.ராமச்சந்திரன், கே.ராமதாஸ், தோப்பு கே.சுந்தா், ஆா்யுகே.தீட்சிதா், ஆா்.ராஜகோபாலன், பி.எல்.பொன்அழகப்பன், சங்கர நடராஜ தீட்சிதா் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com