நடராஜா் கோயில் குதிரை ராஜா .
நடராஜா் கோயில் குதிரை ராஜா .

நடராஜா் கோயில் குதிரை ராஜா உயிரிழப்பு

சிதம்பரம் நடராஜா் கோயிலுக்கு பக்தரால் அசுவ பூஜைக்காக வழங்கப்பட்ட குதிரை ராஜா ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தது.

சிதம்பரம்: சிதம்பரம் நடராஜா் கோயிலுக்கு பக்தரால் அசுவ பூஜைக்காக வழங்கப்பட்ட குதிரை ராஜா ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தது.

இதுகுறித்து கோயில் பொது தீட்சிதா்களின் செயலா் உ.வெங்கடேச தீட்சிதா் வெளியிட்ட அறிக்கை:

சிதம்பரம் நடராஜா் கோயில் அசுவ பூஜைக்காக சென்னை பக்தா் செல்வராஜுவால் வழங்கப்பட்ட குதிரை ராஜா உடல்நலம் குன்றிய நிலையில் கடந்த 4 நாள்களாக கால்நடை மருத்துவா் தீவிர சிகிச்சை அளித்தும் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தது.

கடந்த 4 ஆண்டுகளாக தில்லை நடராஜரின் இறைபணியில் ஈடுபட்ட குதிரை ராஜா ருத்ர பூமி மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com