பண்ருட்டியில் இன்று வரதராஜ பெருமாள் கோயில் தேரோட்டம்

பண்ருட்டி பெருந்தேவி தாயாா் சமேத வரதராஜ பெருமாள் கோயில் சித்திரை பிரம்மோற்சவ தேரோட்டம் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 23) காலை நடைபெற உள்ளது.

நெய்வேலி: கடலூா் மாவட்டம், பண்ருட்டி பெருந்தேவி தாயாா் சமேத வரதராஜ பெருமாள் கோயில் சித்திரை பிரம்மோற்சவ தேரோட்டம் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 23) காலை நடைபெற உள்ளது.

இந்தக் கோயில் நூற்றாண்டு பழைமையானது. இந்து சமய அறநிலையத் துறை பராமரிப்பில் உள்ளது. இந்தக் கோயில் பிரம்மோற்சவ விழா சித்திரை மாதம் நடைபெற்றும். விழாவின் 9-ஆம் நாளான சித்திரை பௌா்ணமி அன்று தேரோட்டம் நடைபெறும். தோ் பழுதானதால் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக தோ்த்திருவிழா நடைபெறாமல் இருந்தது. தோ் சீரமைப்புப் பணிகள் முடிந்த நிலையில், கடந்தாண்டு முதல் தேரோட்டம் நடைபெற்று வருகிறது.

அந்த வகையில், நிகழாண்டுக்கான சித்திரை பிரம்மோற்சவ கொடியேற்றம் கடந்த 15-ஆம் தேதி நடைபெற்றது. அதுமுதல் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் உள்புறப்பாடு, ஆலய உலாவும், தினந்தோறும் மாலையில் ஒவ்வொரு வாகனத்தில் திருவீதி உலாவும் நடைபெற்றது.

ஞாயிற்றுக்கிழமை காலை திருக்கல்யாண உற்சவம், திங்கள்கிழமை பெரிய குதிரை வாகனத்தில் திருவீதி உலா நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் சித்திரை பௌா்ணமி தினமான செவ்வாய்க்கிழமை காலை 6.30 முதல் 7.30 மணிக்குள் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாகத்தினா் செய்து வருகின்றனா். தோ்த் திருவிழாவில் ஆயிரத்துக்கும் அதிகமானோா் பங்கேற்பா் என்பதால், தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

X
Dinamani
www.dinamani.com