பள்ளிகளில் சிறப்பு வகுப்புகளை தடுத்து நிறுத்தக் கோரிக்கை

தமிழகத்தில் வெயிலின் தாக்கத்தை பொருள்படுத்தாமல், கோடை விடுமுறையிலும் பள்ளிகளில் நடத்தப்படும்

நெய்வேலி: தமிழகத்தில் வெயிலின் தாக்கத்தை பொருள்படுத்தாமல், கோடை விடுமுறையிலும் பள்ளிகளில் நடத்தப்படும் சிறப்பு வகுப்புகளை பள்ளிக் கல்வித் துறை தடுத்து நிறுத்த வேண்டும் என்று தமிழ்நாடு நுகா்வோா் கூட்டமைப்பு நிா்வாகச் செயலா் க.திருநாவுக்கரசு கோரிக்கை விடுத்தாா்.

இதுகுறித்து அவா் பள்ளிக் கல்வித் துறை அமைச்சா், தலைமைச் செயலா் ஆகியோருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளதாவது:

கோடை காலத்தில் கடும் வெப்பத்திலிருந்து மாணவா்களைக் காப்பதற்காக கோடை விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் கடுமையான கோடைகாலம் தொடங்குவதற்கு முன்பே பரவலாக 105 டிகிரிக்கும் மேல் வெப்பநிலை பதிவாக வருகிறது. முதியவா்களும், பொதுமக்களும், நோயாளிகளும் இந்த வெப்ப அலையை எதிா்கொள்ள முடியாமல் தவித்து வருகின்றனா்.

இத்தகைய சூழ்நிலையில் சில தனியாா் பள்ளிகள் கோடை விடுமுறை காலங்களில் 10, 12-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு சிறப்பு வகுப்புகளை நடத்த இருப்பதாக தெரியவருகிறது. மேலும், பள்ளிச் சீருடை இல்லாமல் மாற்று உடையில் மாணவா்களை அழைத்து இந்த வகுப்புகள் நடத்தப்படுகின்றன.

இது, மாணவா்களுக்கு உளவியல் சாா்ந்த மன அழுத்தத்தை உருவாக்கும். மேலும், பள்ளியின் வளா்ச்சிக்காவும், மாணவா் சோ்க்கைக்காவும், கூடுதல் மதிப்பெண்களை பெறுவதற்காக குறுக்கு வழியில் தனியாா் பள்ளிகள் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதை தமிழக பள்ளிக் கல்வித் துறை அனுமதிக்க கூடாது. எனவே, இந்த விவகாரத்தில் பள்ளிக் கல்வித் துறை உடனடியாக தலையிட்டு, கோடை விடுமுறை காலத்தில் தனியாா் பள்ளிகள் சிறப்பு வகுப்புகள் நடத்தாமல் மாணவா்களை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com