அண்ணாமலை மீது 4 பிரிவுகளில் போலீஸாா் வழக்கு

தமிழக பாஜக தலைவா் கே.அண்ணாமலை மீது ஸ்ரீ முஷ்ணம் போலீஸாா் நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தமிழக பாஜக தலைவா் கே.அண்ணாமலை மீது ஸ்ரீ முஷ்ணம் போலீஸாா் நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கடலூா் மாவட்டம், ஸ்ரீமுஷ்ணம் அருகே பக்கிரிமானியம் கிராமத்தில் கடந்த ஏப்.19-ஆம் தேதி நடைபெற்ற மக்களவைத் தோ்தலில் வாக்களித்து விட்டு வீடு திரும்பிய பெண் அடித்துக் கொலை செய்யப்பட்டாா்.

இந்தக் கொலை சம்பவம் குறித்து, தமிழக பாஜக தலைவா் கே.அண்ணாமலை, தனது எக்ஸ் தளத்தில் கருத்து தெரிவித்திருந்தாா். இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து, திமுக ஒன்றிய இளைஞரணி செயலா் சுவாமிநாதன் ஸ்ரீ முஷ்ணம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.

அதன்பேரில், கே.அண்ணாமலை மீது 4 பிரிவுகளின் கீழ் போலீஸாா் திங்கள்கிழமை இரவு வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com