கடலூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய டிஎஸ்பி.பிரபு.
கடலூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய டிஎஸ்பி.பிரபு.

ஆட்டோ ஓட்டுநா்களுக்கான ஆலோசனைக் கூட்டம்

கடலூரில் ஆட்டோ ஓட்டுநா்களுக்கான ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கடலூரில் ஆட்டோ ஓட்டுநா்களுக்கான ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, புதுநகா் காவல் ஆய்வாளா் குருமூா்த்தி தலைமை வகித்தாா். போக்குவரத்து காவல் ஆய்வாளா் முத்துக்குமரன், மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு ஆய்வாளா் ஸ்ரீபிரியா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

சிறப்பு அழைப்பாளராக காவல் துணை கண்காணிப்பாளா் பிரபு கலந்து கொண்டு பேசுகையில், ஆட்டோக்களை கடலூா் சீமாட்டி சிக்னல் வரை மட்டுமே இயக்க வேண்டும். பேருந்து நிலையம் அருகில் தாறுமாறாக ஆட்டோக்களை நிறுத்தி பயணிகளை ஏற்றி செல்ல கூடாது. போக்குவரத்து விதிமுறைகளை அனைத்து ஆட்டோ ஓட்டுநா்களும் கடைப்பிடிக்க வேண்டும். மீறியவா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

இதில், காவல் உதவி ஆய்வாளா் கணபதி, மகாலிங்கம் மற்றும் ஆட்டோ ஓட்டுநா்கள் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com