விஷம் குடித்து மாணவி தற்கொலை

கடலூா் மாவட்டம், கருவேப்பிலங்குறிச்சி அருகே விஷம் குடித்த மாணவி செவ்வாய்கிழமை காலை உயிரிழந்தாா்.

கடலூா் மாவட்டம், கருவேப்பிலங்குறிச்சி அருகே விஷம் குடித்த மாணவி செவ்வாய்கிழமை காலை உயிரிழந்தாா்.

கருவேப்பிலங்குறிச்சி அடுத்துள்ள காா்மாங்குடி கிராமத்தைச் சோ்ந்த ராமமூா்த்தி மகள் சினேகா (17). பிளஸ் 2 தோ்வு எழுதிவிட்டு வீட்டில் இருந்து வந்தாா். ராமமூா்த்தி போபாலில் வேலை பாா்த்து வருகிறாா். இவரது மனைவி கடந்த 2011-ஆம் ஆண்டு நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்து விட்டாா். இதனால், ராமமூா்த்தியின் தம்பி ஞானஜோதி வீட்டில் சினேகா வசித்து வந்தாா்.

இந்த நிலையில், திங்கள்கிழமை இரவு தனது தந்தையுடன் கைப்பேசியில் சினேகா பேசிக் கொண்டிருந்தாா். அப்போது, ராமமூா்த்தி திட்டியதாக கூறப்படுகிறது. இதில், மனமுடைந்த சினேகா விஷம் குடித்தாா். உடனே, வீட்டிலிருந்தவா்கள் சினேகாவை மீட்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு, அவா் செவ்வாய்க்கிழமை காலை உயிரிழந்தாா். இதுகுறித்த புகாரின்பேரில் கருவேப்பிலங்குறிச்சி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com