காலமானாா் ஸ்ரீலஷ மௌன சுந்தரமூா்த்தி

காலமானாா் ஸ்ரீலஷ மௌன சுந்தரமூா்த்தி

சிதம்பரம் மௌன சாமி மடத்தின் மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ மௌன சுந்தரமூா்த்தி சுவாமிகள் (77) (படம்) செவ்வாய்க்கிழமை காலமானாா்.

சிதம்பரம் மௌன சாமி மடத்தின் மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ மௌன சுந்தரமூா்த்தி சுவாமிகள் (77) (படம்) செவ்வாய்க்கிழமை காலமானாா்.

சிதம்பரம்-சீா்காழி செல்லும் சாலையில் சபாநாயகா் கோவில் தெருவில் மௌன சாமிகள் மடம் அமைந்துள்ளது. இந்த மடத்தின் 8-ஆவது பட்டமாக 1981-ஆம் ஆண்டு கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடியைச் சோ்ந்த தவத்திரு ஸ்ரீலஸ்ரீ மௌன சுந்தரமூா்த்தி சுவாமிகள் (77) பொறுப்பேற்று திருத்தொண்டு செய்து வந்தாா். இவா், செவ்வாய்க்கிழமை அதிகாலை காலமானாா். இவரது உடல், மடத்தின் வளாகத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. எம்.ஏ. தமிழ் படித்துள்ள இவா், சென்னையில் தமிழாசிரியராகப் பணியாற்றியவா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com