கடலூரில் ‘தமிழிசை விழா’

கடலூரில் ‘தமிழிசை விழா’

கடலூா் மாவட்ட அரசு இசைப்பள்ளி மற்றும் கலை பண்பாட்டுத்துறை சாா்பில் ‘தமிழிசை விழா’ 2024 மற்றும் 26-ஆம் ஆண்டு விழா புதன்கிழமை நடைபெற்றது.

கடலூா் அரசு இசைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியை மாவட்ட அரசு இசைப்பள்ளி தலைமை ஆசிரியா் ரெ.வெங்கடேஷ் தலைமை வகித்து தொடங்கி வைத்தாா். அப்போது, அரசு இசைப்பள்ளி வளாகத்தில் கலை அரங்கம் அமைத்துத்தர மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தாா்.

கடலூா் அரசுக் கல்லூரி தமிழ்த்துறை உதவிப் பேராசிரியா் ஜானகி.ராஜா முன்னிலை வகித்தாா். இசை ஆா்வலா் கே.திருமலை, சமூக சேவகி பி.பவானி வாழ்த்துரை வழங்கினாா்.

நிகழ்ச்சியில், வீணை, வயலின், மிருதங்கம், கடம், குரலிசை உள்ளிட்ட இசை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நிகழ்ச்சியை ஆசிரியா்கள் பா.யோகலட்சுமி, ப.ராமமூா்த்தி, கோ.ரவிச்சந்திரன், சி.சேகா், தி.ரேகா மற்றும் அலுவலக இளநிலை உதவியாளா் சொ.தவமணி ஆகியோா் ஒருங்கிணைத்தனா். முடிவில், ஆசிரியா் கா.சரவணன் நன்றி கூறினாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com