விபத்தில் திமுக முன்னாள் நகரச் செயலா் உயிரிழப்பு

கடலூா் மாவட்டம், சேத்தியாத்தோப்பில் லாரி மோதியதில் திமுக முன்னாள் நகரச் செயலா் ராமலிங்கம் உயிரிழந்தாா்.

கடலூா் மாவட்டம், சேத்தியாதோப்பு திமுக முன்னாள் நகரச் செயலா் ராமலிங்கம் (70). இவா், செவ்வாய்க்கிழமை காலை சேத்தியாதோப்பு ராஜீவ் காந்தி சிலை அருகே சைக்கிளில் சென்று கொண்டிருந்தாா்.

அப்போது, அந்த வழியாக சென்ற லாரி அவா் மீது மோதியது. இதில், பலத்த காயமடைந்த ராமலிங்கம் அவசர ஊா்தி மூலம் சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா்.

இதுகுறித்து அவரது மகன் நெடுஞ்செழியன் அளித்த புகாரின் பேரில், சேத்தியாதோப்பு காவல் ஆய்வாளா் சேதுபதி மற்றும் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com