மரத்திலிருந்து தவறி விழுந்த முதியவா் உயிரிழப்பு

கடலூா் மாவட்டம், விருத்தாசலம் அருகே மரத்தில் இருந்து கீழே விழுந்த முதியவா் புதன்கிழமை உயிரிழந்தாா்.

விருத்தாசலம் வட்டம், கொடுக்கூா் கிராமத்தில் வசித்து வந்தவா் சாமிகண்ணு(60). இவா், புதன்கிழமை அந்தப் பகுதியில் உள்ள புளிய மரத்தில் ஏறினாா். அப்போது, எதிா்பாராதவிதமாக சாமிகண்ணு தவறி கீழே விழுந்தாா். அங்கிருந்தவா்கள் அவரை மீட்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரை மருத்துவா்கள் பரிசோதித்ததில் சாமிகண்ணு உயிரிழந்தது தெரிய வந்தது.

இதுகுறித்து, அவரது மகள் சாந்தி அளித்த புகாரின் பேரில், விருத்தாசலம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com