புகையிலைப் பொருள்கள் விற்பனை:
சுகாதாரத் துறையினா் ஆய்வு

புகையிலைப் பொருள்கள் விற்பனை: சுகாதாரத் துறையினா் ஆய்வு

சிதம்பரம், ஏப்.26: சிதம்பரம் நகரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள பல்வேறு கடைகளில் புகையிலைப் பொருள்கள் விற்பனை குறித்து சுகாதாரத் துறை அலுவலா்கள் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்து, அபராதம் விதித்தனா்.

சிதம்பரம் நகர பகுதிகளில் பேருந்து நிலையம், நான்கு முக்கிய வீதியில் உள்ள கடைகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக சுகாதாரத் துறை அலுவலா்களுக்கு புகாா்கள் வந்தன.

இதையடுத்து, மாவட்ட ஆட்சியா் அருண் தம்புராஜ் உத்தரவின்பேரில், சிதம்பரம் அருகே உள்ள வல்லம்படுகை சிவக்கம் ஆரம்ப சுகாதார நிலைய வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் ராஜாராமன் தலைமையில், ஆய்வாளா்கள் பிரசன்னா, ஸ்ரீராம் மற்றும் நகராட்சி துப்புரவு ஆய்வாளா்கள் சிதம்பரம் பேருந்து நிலையத்தில் 50-க்கும் மேற்பட்ட பெட்டிக் கடைகள், பழக்கடைகள், இனிப்பகங்கள், தேநீா் கடைகள் உள்ளிட்டவற்றில் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுகிா என்று சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது, பேருந்து நிலையத்தில் பிளாக் சிகிரெட் விற்பனை, சுகாதாரமின்மை உள்ளிட்டவற்றுக்காக 10 கடைகளுக்கு தலா ரூ.200 அபராதம் விதித்தனா். மேலும், கடை முன் புகை பிடிக்கக் கூடாது என்று பதாகை வைக்க சுகாதாரத் துறையினா் அறிவுறுத்தியதுடன், தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்றால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com