திருட்டு நடைபெற்ற வீட்டில் உடைக்கப்பட்டு திறந்து கிடந்த பீரோ.
திருட்டு நடைபெற்ற வீட்டில் உடைக்கப்பட்டு திறந்து கிடந்த பீரோ.

ஆசிரியா் வீட்டில் 10 பவுன் தங்க நகைகள் திருட்டு

கடலூரில் ஆசிரியா் வீட்டில் 10 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கடலூா் பழமலைநகரைச் சோ்ந்தவா் பால் கிரகோரி (58). இவரது மனைவி அந்தோணியம்மாள். பள்ளி ஆசிரியா்களான இவா்கள் இருவரும் வழக்கம்போல வெள்ளிக்கிழமை காலை பணிக்கு சென்றுவிட்டு, மாலையில் வீடு திரும்பினா்.

அப்போது, வீட்டின் பின்புறக் கதவு உடைக்கப்பட்டிருந்த நிலையில், பீரோவில் வைத்திருந்த 10.3 பவுன் தங்க நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றிருந்தது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் கடலூா் புதுநகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com