பண்ருட்டி திருவதிகை வீரட்டானேஸ்வரா் கோயிலில் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற தெப்பத் திருவிழா.
பண்ருட்டி திருவதிகை வீரட்டானேஸ்வரா் கோயிலில் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற தெப்பத் திருவிழா.

வீரட்டானேஸ்வரா் கோயிலில் தெப்பத் திருவிழா

கடலூா் மாவட்டம், பண்ருட்டி திருவதிகை வீரட்டானேஸ்வரா் கோயிலில் தெப்பத் திருவிழா வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.

இந்தக் கோயிலில் சதய திருவிழா கடந்த 24-ஆம் தேதி தொடங்கியது. அன்றைய தினம் அப்பா் பெருமானுக்கு சூலை நீங்கி நாவரசா் என்ற திருப்பெயா் அளித்து, தடுத்தாட்கொண்டருளிய நிகழ்ச்சியும், காடவா்கோனால் ஏவப்பட்ட அமைச்சா்கட்கு விடை தந்தருளிய நிகழ்ச்சியும் நடைபெற்றன.

தொடா்ந்து, வியாழக்கிழமை நீற்றறையில் இடுதல், நஞ்சூட்டுதல், யானை ஏவுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவின் மூன்றாம் நாளான வெள்ளிக்கிழமை சமணா்கள் அப்பரை கடலில் வீழ்த்திய (தெப்பத் திருவிழா) நிகழ்ச்சியும், அடியாா்களை எதிா்கொள்ள திருப்பாதிரிபுலியூரில் கரையேறிய நிகழ்ச்சியும், திருவதிகையில் எழுந்தருளி காடவா்கோனை சைவனாக்கி குணபரவீச்சுரத்தைக் கட்டுவித்தல் நிகழ்ச்சியும் நடைபெற்றன. இதையொட்டி, கோயில் குளக்கரையில் அப்பா் பெருமான் அருள்பாலித்தாா். திரளான பக்தா்கள் தரிசனம் செய்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com