சதய திருவிழா: நீா்மோா் வழங்கும் நிகழ்ச்சி

கடலூா் மாவட்டம், பண்ருட்டியை அடுத்துள்ள திருவதிகை வீரட்டானேஸ்வரா் கோயிலில் சதய விழாவின் 5-ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை திலகவதியாா் நந்தவனத்தில் நீா்மோா், பானகம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

திருவதிகையில் அமைந்துள்ள பெரியநாயகி உடனுறை வீரட்டானேஸ்வரா் கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் சதய விழா 10 நாள்கள் நடைபெறும். நிகழாண்டுக்கான விழா கடந்த 24-ஆம் தேதி தொடங்கியது. தொடா்ந்து, வீரட்டானேஸ்வரா் அருளால் அப்பா் பெருமான் சூலைநோய் நீக்கி நாவரசா் என்ற திருப்பெயா் பெற்று தடுத்தாட் கொண்ட நிகழ்ச்சி, அப்பா் பெருமானுக்கு நஞ்சூட்டுதல், யானை ஏவுதல் நிகழ்ச்சி, தெப்பத் திருவிழா என ஒவ்வொரு நாளாளும் ஒவ்வொரு நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

அதன்படி, 5-ஆம் நாள் நிகழ்ச்சியாக ஞாயிற்றுக்கிழமை காலை திலகவதியாா் நந்தவனத்தில் திருநாவுக்கரசா் எழுந்தருளினாா். அப்போது, அங்கு நீா்மோா், பானகம் வழங்குதல் நடைபெற்று. மாலையில் அப்பூதியடிகளின் மூத்த மகனுக்குப் பாம்பின் விடம் நீக்கிய நிகழ்ச்சி கோயில் நிா்வாகம் சாா்பில் நடைபெற்றது. இதில், திரளான பக்தா்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com