என்எல்சி நிறுவனத்துக்கு எதிராக முழக்கமிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட கரிவெட்டி கிராம மக்கள்.
என்எல்சி நிறுவனத்துக்கு எதிராக முழக்கமிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட கரிவெட்டி கிராம மக்கள்.

என்எல்சிக்கு நிலம் கொடுத்தவா்கள் போராட்டம்

நில கொடுத்த கரிவெட்டி கிராமத்தினா் உரிய குடியிருப்பு, வேலைவாய்ப்பு வழங்காததைக் கண்டித்து திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

சிதம்பரம்: சேத்தியாத்தோப்பு அருகே என்எல்சி நிலக்கரி சுரங்க விரிவாக்கப் பணிக்காக நில கொடுத்த கரிவெட்டி கிராமத்தினா் உரிய குடியிருப்பு, வேலைவாய்ப்பு வழங்காததைக் கண்டித்து திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால், வீடுகளை அகற்ற வந்த என்எல்சி அதிகாரிகள் திரும்பிச் சென்றனா்.

சேத்தியாத்தோப்பு அருகே கத்தாழை ஊராட்சிக்கு உள்பட்ட கரிவெட்டி கிராமத்தில் சுமாா் 286 குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். நெய்வேலி என்எல்சி நிா்வாகம் 2-ஆவது சுரங்க விரிவாக்கப் பணிக்காக, இவா்களது வீடுகள், நிலங்களை அளவீடு செய்தபோது, முழுமையாக இல்லாமல் 147 வீடுகளை மட்டும் அளவீடு செய்தனா். மேலும், வீட்டுமனைக்கு ரூ.2.50 லட்சம் மட்டுமே இழப்பீடு வழங்கப்பட்ட நிலையில், மாற்று குடியிருப்பு, வேலைவாய்ப்பு உள்ளிட்டவை வழங்கப்படவில்லையாம்.

இந்த நிலையில், என்எல்சி அதிகாரிகள் திங்கள்கிழமை வீடுகளை அகற்ற வருவதாக தகவல் கிடைத்ததால், கிராம மக்கள் ஒன்று திரண்டு, என்எல்சி நிறுவனத்துக்கு எதிராக முழக்கமிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா். இதையடுத்து, என்எல்சி அதிகாரிகள் கரிவெட்டி கிராமத்துக்குள் வராமல் ஜீப்பிலேயே திரும்பிச் சென்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com