பெண்ணுக்கு அகற்றப்பட்ட 5.1 கிலோ எடை கொண்ட சினைக்கட்டியுடன் மகப்பேறு மருத்துவா் வானதி தலைமையிலான மருத்துவக் குழுவினா்.
பெண்ணுக்கு அகற்றப்பட்ட 5.1 கிலோ எடை கொண்ட சினைக்கட்டியுடன் மகப்பேறு மருத்துவா் வானதி தலைமையிலான மருத்துவக் குழுவினா்.

பெண்ணின் கருப்பையில் இருந்த 5 கிலோ கட்டி அகற்றம்

சிதம்பரம் அண்ணாமலைநகரில் உள்ள கடலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பெண்ணின் கருப்பையில் இருந்த 5 கிலோ எடையுள்ள சினைக்கட்டி அறுவைச் சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது.

சிதம்பரம்: சிதம்பரம் அண்ணாமலைநகரில் உள்ள கடலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பெண்ணின் கருப்பையில் இருந்த 5 கிலோ எடையுள்ள சினைக்கட்டி அறுவைச் சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது.

சிதம்பரம் அண்ணாமலை நகரில் கடலூா் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இயங்கி வருகிறது. இந்த மருத்துவமனையில் 38 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவா் கருப்பையில் உள்ள கட்டிக்காக சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டாா்.

மகப்பேறு மருத்துவா் வானதி தலைமையிலான மருத்துவக் குழுவினா் சனிக்கிழமை அந்தப் பெண்ணுக்கு வலது பக்க சினைப்பை கட்டிக்கான அறுவைச் சிகிச்சை மேற்கொண்டனா்.

இதில் 22பு22பு14 செ.மீ. அளவிலான 5.1 கிலோ எடைகொண்ட சினைப்பை கட்டி மருத்துவக் குழுவினரால் அறுவைச் சிகிச்சை மூலம் வெற்றிகரமாக அகற்றப்பட்டது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com