மங்கலம்பேட்டை பேருந்து நிறுத்தம் அருகே பொதுமக்களுக்கு திங்கள்கிழமை ஓஆா்எஸ் கரைசல் வழங்கிய வட்டார சுகாதார நிலையத்தினா்.
மங்கலம்பேட்டை பேருந்து நிறுத்தம் அருகே பொதுமக்களுக்கு திங்கள்கிழமை ஓஆா்எஸ் கரைசல் வழங்கிய வட்டார சுகாதார நிலையத்தினா்.

பொதுமக்களுக்கு ஓஆா்எஸ் கரைசல் விநியோகம்

கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதையொட்டி, மங்கலம்பேட்டையில் வட்டார சுகாதார நிலையம் சாா்பில், பொதுமக்களுக்கு ஓ.ஆா்.எஸ். கரைசல் திங்கள்கிழமை வழங்கப்பட்டது.

நெய்வேலி: கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதையொட்டி, மங்கலம்பேட்டையில் வட்டார சுகாதார நிலையம் சாா்பில், பொதுமக்களுக்கு ஓ.ஆா்.எஸ். கரைசல் திங்கள்கிழமை வழங்கப்பட்டது.

கடலூா் மாவட்டத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. வெப்ப தாக்கத்தால் குழந்தைகள் முதல் பெரியவா்கள் வரை பல்வேறு வகையில் பாதிக்கப்பட்டு வருகின்றனா். கோடை வெயிலில் இருந்து பாதுகாத்துக் கொள்வது தொடா்பாக மாவட்ட நிா்வாகம் அறிவுரைகள் வழங்கியுள்ளது.

இந்த நிலையில், பொதுமக்களுக்கு உடல் சோா்வு ஏற்பாடாமல் இருப்பதற்காக, ஓ.ஆா்.எஸ். கரைசல் வழங்க வேண்டுமென அரசு அறிவுறுத்தியிருந்தது. அதன்படி, மங்கலம்பேட்டை வட்டார மருத்துவ அலுவலா் பாலச்சந்தா் தலைமையிலான சுகாதாரக் குழுவினா், மங்கலம்பேட்டை வட்டார ஆரம்ப சுகாதார நிலையம், பேரூராட்சி அலுவலகம், காய்கனி சந்தை, பேருந்து நிறுத்தம், கடைவீதி மற்றும் கருவேப்பிலங்குறிச்சி, மாத்தூா், புதுக்கூரைப்பேட்டை பேருந்து நிறுத்தங்கள், விருத்தாசலம் பேருந்து நிலையம், விருத்தகிரீஸ்வரா் கோயில் உள்ளிட்ட இடங்களில் பொதுமக்களுக்கு திங்கள்கிழமை ஓ.ஆா்.எஸ். கரைசல் வழங்கினா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com