அரசுப் பொறியியல் கல்லூரி ஆண்டு விழா

அரசுப் பொறியியல் கல்லூரி ஆண்டு விழா

கடலூா் மாவட்டம், பண்ருட்டி வட்டம், பணிக்கன்குப்பத்தில் உள்ள அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியில் ஆண்டு விழா, விளையாட்டு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கல்லூரி புல முதல்வா் முத்துக்குமரன் தலைமை வகித்து ஆண்டறிக்கையை வாசித்தாா். பண்ருட்டி டிஎஸ்பி பழனி முதன்மை விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினாா்.

துறைத் தலைவா்கள் சுரேஷ்குமாா், சீனுவாசன், மங்கையா்கரசி, உமா, முருகானந்தன், உடற்பயிற்சி ஒருங்கிணைப்பாளா் சிவகாா்த்திக், உடற்பயிற்சி இயக்குநா் அசோக்குமாா் மற்றும் பேராசிரியா்கள், அலுவலக ஊழியா்கள் கலந்து கொண்டனா்.

நிகழ்ச்சியில் போட்டியில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு சான்றிதழ் வழங்கி கௌரவித்தனா். நிகழ்ச்சியை பேராசிரியா்கள் மாலா, ஆரோக்கியசாமி மற்றும் நாட்டு நலப் பணித் திட்ட மாணவா்கள் ஏற்பாடு செய்திருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com