மத்திய சிறை வளாகத்தில் கஞ்சாவை வீசிய நபா்: போலீஸாா் விசாரணை

கடலூா் மத்திய சிறை வளாகத்தில் கஞ்சாவை வீசிச் சென்றவா் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

கடலூா் கேப்பா் மலையிலுள்ள மத்திய சிறையில் தண்டனை, விசாரணைக் கைதிகள் நூற்றுக்கணக்கானோா் உள்ளனா்.

இங்கு செவ்வாய்க்கிழமை காலை சுமாா் 6 மணியளவில் தலைமைக் காவலா் அம்பா அப்துல் காதா், நிலையக் காவலா் அருணகிரி ஆகியோா் மோப்ப நாய் லிஷாவுடன் சிறையைச் சுற்றிச் சென்றனா். அப்போது, சிறைப் பள்ளியின் பின்புறத்தில் உள்ள மாமரத்தின் அடியில் நெகிழிப் பையில் சுற்றப்பட்ட நிலையில் 20 கிராம் கஞ்சா மீட்கப்பட்டது.

சிறை வளாகத்தில் கஞ்சாவை யாா் வீசியது என்பது தெரியவில்லை.

இதுகுறித்து உதவி சிறை அலுவலா் பெ.செல்வம், கடலூா் முதுநகா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com