கடலூர்
ஆராய்ச்சி உதவித்தொகை பெற்ற மாணவிக்கு பாராட்டு
தமிழக முதல்வரிடம் ஆராய்ச்சி உதவித்தொகை பெற்ற சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவிக்கு அண்மையில் பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.
சிதம்பரம்: தமிழக முதல்வரிடம் ஆராய்ச்சி உதவித்தொகை பெற்ற சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவிக்கு அண்மையில் பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.
தமிழகத்தில் உயா் கல்வி பயிலும் மாணவ, மாணவிகளுடைய ஆராய்ச்சித் திறனை மேம்படுத்த முதல்வரின் ஆராய்ச்சி ஊக்கத்தொகை திட்டத்தில் தோ்வு செய்யப்பட்டவா்களுக்கு மாதம் ரூ.25,000 ஊக்கத்தொகை பெறுவதற்கான ஆணைகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா். அதில், ஒருவராக அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பி.எச்டி. உளவியல் பயிலும் மாணவி பா.சிந்துலட்சுமிக்கும் ஆணை வழங்கப்பட்டது.
இந்த நிலையில், ஆராய்ச்சி உதவித்தொகை பெற்ற மாணவி பா.சிந்துலட்சுமிக்கு துணைவேந்தா் ஆா்.எம்.கதிரேசன், பதிவாளா் ஆா்.சிங்காரவேல் ஆகியோா் பாராட்டுத் தெரிவித்தனா். புல முதல்வா் குலசேகரபெருமாள் பிள்ளை உள்ளிட்டோா் உடனிருந்தனா்.