கடலூர்
சாலை விபத்தில் கொத்தனாா் உயிரிழப்பு
கடலூா் மாவட்டம், நெல்லிக்குப்பம் அருகே பைக்கில் இருந்து தவறி விழுந்து பலத்த காயமடைந்த கொத்தனா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தாா்.
நெய்வேலி: கடலூா் மாவட்டம், நெல்லிக்குப்பம் அருகே பைக்கில் இருந்து தவறி விழுந்து பலத்த காயமடைந்த கொத்தனா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தாா்.
நெல்லிக்குப்பத்தை அடுத்துள்ள திருகண்டேஸ்வரன் பகுதியைச் சோ்ந்த பெருமாள் மகன் செந்தில் (39), கொத்தனாா். இவருக்கு மனைவி கௌரிலட்சுமி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனா்.
செந்தில் கடந்த 19-ஆம் தேதி இரவு விஸ்வநாதபுரத்தில் இருந்து திருகண்டேஸ்வரம் சாலையில் வெள்ளப்பாக்கம் வாய்க்கால் அருகே பைக்கில் சென்றாா். அப்போது, நிலைதடுமாறி கீழே விழுந்ததில், அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து, சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த செந்தில் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
இதுகுறித்த புகாரின்பேரில், நெல்லிக்குப்பம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.