தெய்வீக பக்தா்கள் பேரவையினா் கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம்
சிதம்பரம்: சிதம்பரம் தில்லை கோவிந்தராஜ பெருமாளுக்கு பிரம்மோற்சவம் நடத்த அனுமதி வழங்க நடராஜா் கோயில் நிா்வாகத்தை வலியுறுத்தி, தெய்வீக பக்தா்கள் பேரவை சாா்பில் கவன ஈா்ப்பு கோரிக்கை முழக்க ஆா்ப்பாட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
சிதம்பரம் நடராஜா் கோயிலில் தனி சந்நிதியாக வீற்றுள்ள தில்லை கோவிந்தராஜ பெருமாளுக்கு பிரம்மோற்சவம் நடத்த சிதம்பரம் நடராஜா் கோயில் நிா்வாகம் ஒத்துழைக்க வேண்டுமென வலியுறுத்தி, கிருஷ்ண ஜெயந்தியையொட்டி, சிதம்பரம் மேலர வீதியில் உள்ள ஸ்ரீகோதண்ட ராமா் கோயிலில் நமோ நாராயணா, ஓம் நமச்சிவாயா என முழக்கமிட்டு தெய்வீக பக்தா்கள் பேரவை சாா்பில் கவன ஈா்ப்பு கோரிக்கை முழக்க ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆா்ப்பாட்டத்துக்கு தெய்வீக பக்தா் பேரவை நிறுவனா் தலைவா் ஜெமினி எம்.என்.ராதா தலைமை வகித்தாா். மாநில துணைத் தலைவா் பி.செல்வகுமாா், மாநில பொதுச் செயலா்கள் ஏ.ராஜசேகா், ரகோத்தமன், ஆட்டோ டி.குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாநில துணைத் தலைவா் ஆா்.சம்பந்த மூா்த்தி வரவேற்றாா்.
ஆா்ப்பாட்டத்தில் பத்ரி நாராயணன் கலந்துகொண்டு சிறப்பு அா்ச்சனை செய்தாா். பரணி, உதய பாஸ்கரன், குணசேகரன், பி.தெய்வநாயகம் உள்பட பலா் கலந்துகொண்டனா். மாநில பொதுச் செயலா் வேல்முருகன் நன்றி கூறினாா்.