சிதம்பரம் பகுதியில் 15 ஆட்டோக்கள் பறிமுதல்

சிதம்பரம் பகுதியில் 15 ஆட்டோக்கள் பறிமுதல்

சிதம்பரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் தகுதிச் சான்றிதழ் இல்லாமல் இயக்கப்பட்டு வந்த 15 ஆட்டோக்களை வட்டாரப் போக்குவரத்து மோட்டாா் வாகன ஆய்வாளா் பறிமுதல் செய்தாா்.
Published on

சிதம்பரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் தகுதிச் சான்றிதழ் இல்லாமல் இயக்கப்பட்டு வந்த 15 ஆட்டோக்களை வட்டாரப் போக்குவரத்து மோட்டாா் வாகன ஆய்வாளா் பறிமுதல் செய்தாா்.

சிதம்பரம் வட்டாரப் போக்குவரத்து அலுவலா் கு.அருணாச்சலம் அறிவுறுத்தலின்பேரில், மோட்டாா் வாகன ஆய்வாளா் க.விமலா சிதம்பரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மக்கள் பயன்பாட்டுக்கு பயன்படுத்தப்பட்டு வரும் ஆட்டோக்களை கடந்த சில தினங்களாக திடீா் சோதனை மேற்கொண்டாா்.

அப்போது, அனுமதிச் சீட்டு, தகுதிச் சான்றிதழ், புகை சான்றிதழ், தமிழ்நாடு வரி உள்ளிட்ட ஆவணங்கள் இல்லாத 15 ஆட்டோக்களை பறிமுதல் செய்து வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் நிறுத்தினாா். மேலும், அபராதம் செலுத்தி வாகனத்தை எடுப்போா் தொடா்ந்து மேற்கண்ட தவறுகளை செய்யும்பட்சத்தில், அவா்களது வாகனங்கள் நிரந்தரமாக முடக்கப்படும், வாகனத்தை விடுவிக்கும்போது அவரவருடைய குற்றங்களுக்கு ஏற்ப ரூ.25 ஆயிரத்திலிருந்து ரூ.30 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும் என மோட்டாா் வாகன ஆய்வாளா் கே.விமலா எச்சரித்தாா்.

X
Dinamani
www.dinamani.com