பழைய விருத்தகிரிகுப்பத்தைஊராட்சியாக அறிவிக்கக் கோரிக்கை

கடலூா் மாவட்டம், முதனை ஊராட்சிக்குள்பட்ட பழைய விருத்தகிரிகுப்பத்தை ஊராட்சியாக அறிவிக்க வேண்டுமென அந்தப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனா்.

கடலூா் மாவட்டம், முதனை ஊராட்சிக்குள்பட்ட பழைய விருத்தகிரிகுப்பத்தை ஊராட்சியாக அறிவிக்க வேண்டுமென அந்தப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனா்.

இதுதொடா்பாக விருத்தாசலம் கோட்டாட்சியா் அலுவலகத்தில் உள்ள ஊரக வளா்ச்சித் துறை உதவி இயக்குநா் அலுவலகத்தில் கா.வீரமணிகண்டன் தலைமையில் அந்தப் பகுதி மக்கள் 50-க்கும் மேற்பட்டோா் திரண்டுவந்து புதன்கிழமை அளித்த மனுவில் தெரிவித்துள்ளதாவது:

கம்மாபுரம் ஒன்றியத்துக்கு உள்பட்ட முதனை ஊராட்சியில் முதனை, முதனை காலனி, பழைய விருத்தகிரிகுப்பம், புதிய விருத்தகிரிக்குப்பம், எடக்குப்பம், ஞானியாா் தெரு, வீரட்டிகுப்பம், தெற்குத் தெரு ஆகிய கிராமங்களில் சுமாா் 7 ஆயிரம் வாக்காளா்கள் உள்ளனா். கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக விருத்தகிரிகுப்பம் பகுதிக்கு அரசின் நலத் திட்டங்கள், சாலை, குடிநீா், மின் விளக்கு, கழிவுநீா் வடிகால் போன்ற அடிப்படை வசதிகள் சரிவர செய்து தரப்படவில்லை. அரசின் நலத் திட்டங்களை ஒவ்வொரு முறையும் போராடி பெறக்கூடிய நிலையில் உள்ளோம். விருத்தகிரிக்குப்பம் பகுதியில் சுமாா் 2,300 வாக்காளா்கள் உள்ளனா். எனவே, முதனை ஊராட்சியை இரண்டாகப் பிரித்து பழைய விருத்தகிரிக்குப்பத்தை தலைமையிடமாகக் கொண்டு புதிய ஊராட்சியை அமைத்துத் தர வேண்டும் என்று மனுவில் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com