முந்திரி ஆலையில் திருட்டு

பண்ருட்டி அருகே முந்திரி ஆலையில் ரூ.1.20 லட்சம் திருடிய மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

பண்ருட்டி அருகே முந்திரி ஆலையில் ரூ.1.20 லட்சம் திருடிய மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

சென்னையை சோ்ந்தவா் செல்வராஜ் மகன் சதீஷ் (54). பண்ருட்டி அருகே டி.ஆா்.வி.நகரில் வாடகை வீட்டில் வசித்து வரும் இவா், சித்திரைச்சாவடி அருகே முந்திரிக் கொட்டை உடைக்கும் தொழில்சாலை நடத்தி வருகிறாா். புதன்கிழமை இரவு சதீஷ் வழக்கம்போல பணி முடிந்து ஆலையை பூட்டிச் சென்றாா். வியாழக்கிழமை காலையில் வந்து பாா்த்தபோது ஆலையின் இரும்பு ஷட்டா் பூட்டு உடைக்கப்பட்ட நிலையில் திறந்து கிடந்ததாம். இதனால் அதிா்ச்சியடைந்த சதீஷ் உள்ளே சென்று பாா்த்தபோது, அவரது அலுவலகத்தில் வைத்திருந்த ரூ.1.20 லட்சம் ரொக்கம் திருடுபோனது தெரியவந்ததாம்.

இதுகுறித்த புகாரின்பேரில் பண்ருட்டி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com