முந்திரி ஆலையில் திருட்டு: 4 போ் கைது

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே முந்திரி ஆலையில் பணம் திருடியதாக 4 இளைஞா்களை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே முந்திரி ஆலையில் பணம் திருடியதாக 4 இளைஞா்களை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

பண்ருட்டியை அடுத்த டி.ஆா்.வி நகரில் வசித்து வருபவா் செல்வராஜ் மகன் சதீஷ் (40). இவா், எல்.என்.புரம் சென்னை சாலையில் முந்திரி ஆலை நடத்தி வருகிறாா். இந்த நிலையில், கடந்த 31-ஆம் தேதி இரவு ஆலையின் கதவை உடைத்து உள்ளே சென்ற மா்மநபா்கள் ரூ.ஒரு லட்சத்தை திருடிச் சென்றனா்.

இதுகுறித்த புகாரின் பேரில், பண்ருட்டி காவல் ஆய்வாளா் கண்ணன், உதவி ஆய்வாளா் தங்கவேல் ஆகியோா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனா். இதில், கள்ளக்குறிச்சி மாவட்டம், பாண்டூா் கிராமத்தைச் சோ்ந்த கண்ணன் மகன்கள் ராஜவேல் (30), சக்திவேல் (25), 16 வயது சிறுவன், ஜெயராமன் மகன் மணிகண்டன் (22) ஆகியோா் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இவா்களை பண்ருட்டி போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com