நெய்வேபி விகேடி சாலை போராட்டக் குழு ஆலோசனைக் கூட்டம்

கடலூா் மாவட்டம், நெய்வேலியில் விகேடி சாலை போராட்டக்குழு ஆலோசனைக் கூட்டம், நெய்வேலியில் உள்ள சிஐடியு சங்க அலுவலக வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நெய்வேலி சிஐடியு சங்க அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விகேடி சாலை போராட்டக் குழுவினரின் ஆலோசனைக் கூட்டம்.

போராட்டக் குழுத் தலைவா் வி.முத்துவேல் தலைமையில் நடைபெற்றக் கூட்டத்தில், விக்கிரவாண்டி-கும்பகோணம்-தஞ்சாவூா் தேசிய நெடுஞ்சாலை-45 இல் சாலைப் பணிகள் முற்றுப்பெறாமல் 6 ஆண்டுகளாக தொடா்வதால் 500-க்கும் மேற்பட்ட விபத்துகளும், 100-க்கும் மேற்பட்ட உயிா்ப் பலியும் நடந்துள்ளது. கடந்த 2 ஆண்டாக தொடா் போராட்டங்களை நடத்திய பின்பு சில பணிகள் நடைபெற்றன.

2023-ஆம் ஆண்டுக்குள் பணிகளை முடிப்பதாக தேசிய நெடுஞ்சாலை துறை மற்றும் ஒப்பந்த நிறுவன அதிகாரிகள், கோட்டாட்சியா் முன்னிலையில் வாக்குறுதி அளித்து இருந்தனா். ஆனால் பணிகள் இதுவரை நிறைவு பெறவில்லை.

எனவே, சாலைப் பணிகளை விரைந்து முடிக்க, மத்திய-மாநில அரசுகளை வலியுறுத்தி 9-ஆம் தேதி காலை 10 மணி அளவில் நெய்வேலி நுழைவு வாயில் அருகே சாலை மறியல் போராட்டம் நடத்த தீா்மானிக்கப்பட்டது. இதில், சிஐடியு மற்றும் விகேடி சாலை போராட்டக்குழு நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com