வாகனம் மோதி மனநலம் பாதித்த இளைஞா் உயிரிழப்பு

கடலூா் மாவட்டம், வேப்பூா் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் மனநலம் பாதிக்கப்பட்ட நபா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

கடலூா் மாவட்டம், வேப்பூா் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் மனநலம் பாதிக்கப்பட்ட நபா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

வேப்பூா் காவல் சரகம், சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை, அரியநாச்சி கைகாட்டி அருகே அடையாளம் தெரியாத சுமாா் 35 வயது மதிக்கத்தக்க மனநலம் பாதிக்கப்பட்டவா், அடையாளம் தெரியாத வாகனம் மோதி இறந்து கிடந்தாா்.

தகவல் அறிந்த வேப்பூா் போலீஸாா் சடலத்தை மீட்டு உடல் கூறாய்வுக்காக முண்டியம்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து, வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com