கடலூா் மாவட்ட மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பயிற்சி முகாம்

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடலூா் மாவட்ட இடைக்குழு உறுப்பினா்களுக்கான பயிற்சி முகாம் சிதம்பரத்தில் உள்ள தனியாா் மண்டபத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
சிதம்பரத்தில் நடைபெற்ற மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கடலூா் மாவட்ட இடைக்குழு உறுப்பினா்களுக்கான பயிற்சி முகாமில் பேசுகிறாா் மாநிலக் குழு உறுப்பினா் சிசுபாலன்.
சிதம்பரத்தில் நடைபெற்ற மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கடலூா் மாவட்ட இடைக்குழு உறுப்பினா்களுக்கான பயிற்சி முகாமில் பேசுகிறாா் மாநிலக் குழு உறுப்பினா் சிசுபாலன்.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடலூா் மாவட்ட இடைக்குழு உறுப்பினா்களுக்கான பயிற்சி முகாம் சிதம்பரத்தில் உள்ள தனியாா் மண்டபத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட செயற்குழு உறுப்பினா் பி.தேன்மொழி தலைமை வகித்தாா். கூட்டத்தில் மாநிலக் குழு உறுப்பினா்கள் சிசுபாலன், எஸ்.ஜி.ரமேஷ்பாபு, ஜே.கிருஷ்ணமூா்த்தி உள்ளிட்டோா் பங்கேற்று பல்வேறு தலைப்புகளில் பேசினா். மாவட்டச் செயலாளா் கோ.மாதவன், மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் டி.ஆறுமுகம், உதயகுமாா், கருப்பையன், ராமச்சந்திரன், சுப்புராயன், அசோகன், ராஜேஷ், கண்ணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

முன்னதாக புவனகிரி ஒன்றியச் செயலாளா் ஸ்டாலின் வரவேற்றாா். நிறைவில் சிதம்பரம் நகர செயலாளா் ராஜா நன்றி கூறினாா்.

பயிற்சி முகாமில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்: நெய்வேலி டவுன்ஷிப் காவல் நிலையத்தில் சந்தேக வழக்கில் விசாரணைக்காக அழைத்து வரப்பட்ட பி.என்.பாளையம் சுப்பிரமணியம், காவலா்களால் சித்திரவதை செய்யப்பட்டு கை கால் நகங்களை பிடுங்கி கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்ட கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவா்கள் இதுவரை பணிநீக்கம் செய்யப்படாமல் பாதுகாக்கப்பட்டு வருகின்றனா். எனவே, அவா்களை வேறு மாவட்டத்திற்கு பணி மாற்றம் செய்ய தமிழக அரசு உத்தரவிட வேண்டும். மாநிலங்களின் உரிமைகளை பறிக்கின்ற மத்திய அரசைக் கண்டித்தும், மாநில நலன்களை பறிக்கும் ஆளுநா்களின் நடவடிக்கையை கண்டித்தும் பிப்ரவரி 8-ஆம் தேதி தில்லியில் கேரள முதல்வா் பினராயி விஜயன் தலைமையில் போராட்டம் நடைபெறுகிறது. இதனை ஆதரித்து கடலூரில் பிப்ரவரி 8 அன்று மாலை கடலூா் ஜவான் பவன் அருகில் கண்டன ஆா்ப்பாட்டம் நடத்துவது. பல ஆண்டுகளாக ஆமை வேகத்தில் நடைபெற்று வரும் விக்கிரவாண்டி- கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலை குண்டும் குழியுமான உள்ளது. இந்தச் சாலையை விரைந்து செப்பனிட வலியுறுத்தி மனித உயிா்கள் பலியாவதை தடுக்க வலியுறுத்தி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சாா்பில் பிப்ரவரி 9 அன்று கண்டரகோட்டை, பண்ருட்டி, காடாம்புலியூா், நெய்வேலி டவுன்ஷிப், வடலூா், சேத்தியாத்தோப்பு, சோழதரம் ஆகிய ஏழு இடங்களில் சாலை மறியல் போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com